Friday, May 10, 2013

மரக்காணம் கலவரமும் எனது கேள்விகளும்.. ஏன்?

முதற்கண் மரக்காணத்தில் கலவரம், இரண்டு உயிரிழப்பு, ஏற்பட காரணமாய் இருந்த அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஆனால் கீழ்கண்ட எனது கேள்விகளுக்கு நடு நிலை வாதிகளின் (விகடன் உட்பட) பதில் என்ன என அறிய விரும்புகிறேன்...

1.ஒரு கலவரம் ஏற்படுமாயின் தீர விசாரித்து காரணமான அனைவரையும் கைது செய்வது தானே முறை. தீர விசாரிப்பதற்கு நீதி விசாரணை கேட்டது ஒரு ஜனநாயக நாட்டில் எவ்வாறு குற்றமாகும்.

2. இரண்டு உயிர்கள் பலியானது தொடர்பாக இது வரை எந்த நடுநிலையாளரும் கேள்வியோ ஏன் குறைந்த பட்ச வருத்தமோ தெரிவிக்க வில்லையே! ஏன்? இழந்த பொருட்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்து நேர் செய்திடலாம். இழந்த உயிர்களுக்கு?

3.கைதினை தொடர்ந்து நடக்கும் வன்முறை செயல்களை எவ்விதத்திலும் நியாயப் படுத்த முடியாது. ஆனால் அதே நேரத்தில் நடக்கும் அனைத்திற்கும் பாமக வினர்தான் காரணம் என்பதனை ஏற்க இயலாது. போளூரில் பணத்தை கையாடல் செய்ய டாஸ்மாக் ஊழியர்களே தீயிட்டுள்ளனர். பேருந்து ஒன்றின் மீது கல்லெறிந்த ஒருவரை பொது மக்கள் விரட்டி பிடித்து விசாரித்த போது அவர் விசி யை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. வழ்க்கு பதியப் பட்டுள்ளது. இதனை குறிப்பிடுவதனால் நான் பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதனை ஆதரிக்கறேன் என்று பொருள் அல்ல. ஆதாரத்துடன் பிடிபடுவோர் மீது தக்க நடவ்டிக்கை எடுப்பதை வரவேற்கிறேன். (இது போன்ற வன்முறைகளுக்கு பெரும் பொறுப்பை ஊடகங்கள் மீது சுமத்துகிறேன். வன்முறை நடந்தால் அய்யகோ பொது சொத்து நாசமாகிறதே என்று எழுதுவது. இதே ஊடகங்கள் வன்முறை எதுவும் நடக்க வில்லை என்றால் பாமக முன்பு போல பலத்துடன் இல்லை ஆகவே குறிப்பிட்ட இடங்களில் வன்முறை நடக்க வில்லை என எழுதுவது.

4. மரக்காணம் கலவரம் தொடர்பாக விகடன் தரும் தகவல்கள் ஒரு சார்பாய் இருக்கின்றது.ஏன்?

5.பாமக வேற்றுமைகளை கடந்து தமிழர் என்ற பேருண்மையை ஏற்று ஒற்றுமையாய் இருக்க வேண்டிய தருணம் இது.

பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இது வரை பலியானது போதும். இன்று மருத்துவர் மீது பாயும் அடக்கு முறை என்பதனால் அதனை ஆதரிக்க கூடாது........

நன்றி: செகன் நாதன்

WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com

No comments:

Post a Comment