Monday, May 13, 2013

பாமகவின் சட்டவிரோத நடவடிக்கைளை அரசு சகிக்காது - எங்கள் கேள்விகளுக்கு பதில் தேவை?

##பாமகவின் சட்டவிரோத நடவடிக்கைளை அரசு சகிக்காது- தடை விதிக்க தயங்காது: ஜெயலலிதா எச்சரிக்கை!

நீங்கள் தயங்கவேண்டாம்!! தாராளமாக நடவடிக்கை எடுங்கள்! ஆனால் அதற்க்கு முன்னர் நாங்கள் உங்களிடத்தில் சமர்பிக்கும் கேள்விகளுக்கு பதிலுரைத்து பின் எடுங்கள்!! ஆனால் உங்களிடமிருந்து நாங்கள் நியாயாமான பதில்களை எதிர்பார்க்கின்றோம்!

1. வேளான் கல்லூரி மாணவிகள் தருமபுரி அருகே பேருந்தோடு உயிருடன் தீயிட்டு கொலுத்தப்பட்டபோது நீங்கள் இதே வீர வசனத்தை கூறியிருக்கலாமே?!

2. உயர்நீதிமன்றங்கள் நெடுஞ்சாலை மதுபானக்கடைகளை பலமுறை மூடச்சொல்லியும் வாய்தா மேல் வாய்தா வாங்கப்படுவது சத்தியமாக நாட்டுக்கோ நாட்டு மக்களின் நன்மைக்காகவா?!

3. மின்சாரம் இன்றி அடிப்படை செயல்பாடுகள் அத்தனையும் முடங்கிபோயிகிடக்கின்றன சிறு மற்றும் குறும் தொழிகளை அழிவின் விளிம்பிற்க்கு சென்றுவிட்டன இதற்க்கு உங்களது நடவடிக்கைகள் என்ன? அதை எவ்வளவு விரைவாக எட்டியுள்ளீர்கள் என்பதை மக்களுக்கு எடுத்துகூற முடியுமா?

4. மக்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் அவர்கள் கொந்தளித்துதான் போவார்கள் மரக்காணத்தில் நிகழ்த்தபட்டது படுகொலைதான் என்று நீங்கள் கூறியபின்பும் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றாது ஏன்?

5. நாங்கள் செய்தால் வன்முறை சாதி பிரச்சனை அதையே மற்றவர்கள் செய்தால் நன்முறை சமத்துவமா? மற்றவர்களுக்கு ஒன்றென்றால் ஓடோடி ஆதரவுகரம் நீட்டும் இந்த அரசு எங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஏன் ஏளனப்படுத்துகின்றது? நாங்களும் தமிழ்நாட்டில்தான் வாழ்கின்றோம்?!

-முரளிதீர தொண்டைமான்

No comments:

Post a Comment