Saturday, May 18, 2013

பத்திரிக்கை செய்தி: பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியது அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், திமுக-வும் தான் - ஆதாரத்துடன் பிடிபட்டனர்

பத்திரிக்கை செய்தி: பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியது அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், திமுக-வும் தான் - ஆதாரத்துடன் பிடிபட்டனர்





மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும் என கேட்டு விழுப்பரத்தில் தடையை மீறி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் போராட்டம் நடத்த முயல அப்போது அவர் தொண்டர்களோடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
இதில் பாமகவினர் ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என சாலைமறியல், பேருந்துகள் மீது தாக்குதல், மரங்களை வெட்டிப்போட்டு மறியல், லாரிகள் மீது தாக்குதல் என நடத்த வடதமிழகத்தில் நடந்தது. இதனால் அரசாங்கம் போக்குவரத்தை நிறுத்தியது. ஒருவாரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளகினர். 
பாமகவினர் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியபோது திருவண்ணாமலை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் நோக்கி சென்றுக்கொண்டுயிருந்த கன்டெய்னர் லாரி மீது பைக்கில் வந்த சிலர் பெட்ரோல் குண்டை வீசினர். இதில் ஹரியானாவை சேர்ந்த லாரி டிரைவர் தீயில் சிக்கிக்கொண்டார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளித்தும் அது பயனளிக்காமல் இறந்துபோனார். அதோடு கண்டெய்னரில் இருந்த புத்தம் புதிய வண்டிகள் 50ம் எரிந்துப்போயின. 
இந்த வழக்கில் திருவண்ணாமலையை அடுத்த கோட்டாங்கல்லை சேர்ந்த முருகன் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.

இந்நிலையில் நமக்கு வந்த சில தகவல்கள் அடிப்படையில் நாம் விசாரித்தபோது, கைது செய்யப்பட் டவர்களில் முக்கிய குற்றவாளி அதிமுக பிரமுகர் என்பதும், திமுக, பாமகவினரும் இதில் அடக்கம் என்ற தகவல் வந்தது.  அது யார் யார் என விசாரித்தபோது, முதல் குற்றவாளியான முருகன் - அதிமுக பிரமுகர், எக்ஸ் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்துள்ளார். பன்னீர்செல்வம் - அதிமுகவை சேர்ந்தவர், ஆர். மணி, அ. மணி – திமுககாரர்கள், பார்த்திபன், ஏழுமலை, ரமேஷ், ஏழுமலை, செல்வம் இவர்கள் 5 பேர் பாமகவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. 
 
இந்த தகவலை மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் கோ.க.மணி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் பேருந்துகள் மீது கல்வீசியது உட்பட பல விவகாரங்களில் பாமகவினர் மட்டும் ஈடுபடவில்லை மற்ற கட்சியினரும் ஈடுபட்டனர் என அறிக்கை வெளியிட்டார். தற்போது இந்த விவகாரம் கல் வீசியதில் பாமகவினர் மட்டும் ஈடுபடவில்லை மற்ற கட்சியினர் சிலரும் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உறுதியாகிறது. 

நன்றி: நக்கீரன்


No comments:

Post a Comment