கூடங்குளத்தில் 2,27,350 பேர் மீது வழக்கு:மருத்துவர் இராமதாசு ஒருவர் மட்டும் கைது - உச்சநீதிமன்றத்தை அவமதித்தது தமிழ்நாடு அரசு!
கூடங்குளம் போராட்டம் இதுவரை தொடர்பாக 2 லட்சத்து 27 ஆயிரத்து 350 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் மருத்துவர் அய்யா அவர்கள் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் கூடங்குளம் போராட்டக்குழுத் தலைவர் சுப. உதயகுமார் அவர்களுடன் மருத்துவர் இராமதாசு கலந்து கொண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இடிந்த கரையில் விதிக்கப்பட்டிருந்த 144 தடையை மீறியதாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்குத்தொடர்ந்துள்ளது போலவே, மருத்துவர் அய்யா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், வேறு ஒருவர் கூட கைது செய்யப்படாத நிலையில், மருத்துவர் அய்யா ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.
கூடங்குளம் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று (6.05.2013) உத்தரவிட்டது. அதனை அவமதித்து இன்று கூடங்குளம் வழக்கில் மருத்துவர் அய்யாவை கைது செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
"மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டு போராடியதற்காக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை அடுத்தடுத்து பொய் வழக்குகளில் தமிழக அரசு கைது செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற வழக்கில் மருத்துவர் அய்யாவை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் இடிந்தகரையில் நடத்தி வரும் அறவழிப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் மருத்துவர் அய்யா தடையை மீறி பங்கேற்று அணு உலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்காக மருத்துவர் அய்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை மருத்துவர் அய்யா சட்டப்படி சந்தித்து வருகிறார். மருத்துவர் அய்யாவைப் போலவே, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்கள் இடிந்தகரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை மீறித் தான் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்ட தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக இன்று வரை 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் மீது 350 வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. இவர்களில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றஞ்சாற்றப்பட்டவர்களில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 700 பேரின் அடையாளம் கூட இதுவரைக் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை மட்டும் அரசு கைது செய்திருக்கிறது. இதிலிருந்தே மருத்துவர் அய்யாவுக்கு எதிராக தமிழக ஆட்சியாளர்கள் எத்தகைய கொடூரமான பழிவாங்கும் போக்கை கடைபிடித்து வருகிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள முடியும்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘‘கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்புவதற்கு வசதியாக போராட்டத்தில் பங்கேற்ற அனைவர் மீதும் தொடரப்பட்ட குற்ற வழக்குகளைத் திரும்பப்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.
இத்தகைய தீர்ப்பு வெளியானதற்கு அடுத்த நாளே கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்கில் மருத்துவர் அய்யாவை கைது செய்வதென்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, உச்சநீதிமன்றம் கூறிய அமைதியையும், இயல்பு நிலையையும் நிலைநாட்டுவதில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகிறது.
மருத்துவர் அய்யா மீதான 4 வழக்குகளில், மூன்றில் இதுவரை பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு வழக்கில் பிணை கிடைத்தாலும் அவர் விடுதலை ஆகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இப்போது இன்னொரு வழக்கில் அவரை கைது செய்திருக்கிறார்கள். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை பழிவாங்கும் விஷயத்தில் சட்டம், நீதி, மனித உரிமை உள்ளிட்ட அனைத்தையும் தமிழக அரசு காலில் போட்டு மிதித்துவருகிறது.
தமிழக அரசின் இந்த சட்டத்தை மதிக்காத, சர்வாதிகாரத்தனமான, அடக்குமுறைப் போக்கிற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது."

உச்சநீதிமன்ற உத்தரவு (6.05.2013)
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான இலட்சக்கணக்கான
ரூபாய்க்கான விளம்பரங்களை மக்கள் தொலைக்காட்சிக்கு கொடுத்த போது அதை
வேண்டாம் என்று மறுத்த ஒரே தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி மட்டும்தான்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக திரு. உதயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள். அதற்காக இப்போது மருத்துவர் இராமதாசு மீது வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழ்நாடு அரசு. (மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தற்போது சிறையில் வாடுகிறார்.) அணுஉலை வேண்டாம் என்று சொல்வதே கொடுங்குற்றமா?
இதுகுறித்து ஒரு காணொலி:

YouTube Video Link:
WATCH ALL VIDEOS / NEWS RELATED TO Marakkanam and Ayya ARREST:
No comments:
Post a Comment