Tuesday, May 14, 2013

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசினால் பா.ம.க-வை தடை செய்யவும் அரசு தயங்காது -ஜெ - அப்படி பார்த்தல்

"பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசினால் பா.ம.க-வை தடை செய்யவும் அரசு தயங்காது" -ஜெ - ##  இப்படி தாங்கள் சொல்லி உள்ளீர்கள்.. அப்படி பார்த்தல் ..



1. ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீச்சு

2. கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதும் ஆசிட் வீச்சு

3. ஐசரி கணேஷ் தலைமையில் புரட்சித்தலைவியை பாராட்டி நடத்தப்பட்ட அதிமுக மாணவரணி பேரணியில் பல்லவன் போக்குவரத்துக்கழக பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது

4. தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் சென்னை விமான நிலையத்தில் ஏழு மணி நேரம் சிறைவைப்பு. தப்பித்து தாஜ் ஓட்டலுக்கு வந்தபோது, ஓட்டல் மீது தாக்குதல்

5. சென்னை உயர்நீதி மன்றத்துக்கு வந்த சு.சாமிக்கு மகளிர் அணியினரின் சிறப்புத் தரிசனம்

6. டான்சி தீர்ப்புக்கு எதிராக தமிழகம் முழுக்க வன்முறை. தர்மபுரியில் பஸ் எரிப்பு. மாணவிகள் பலி.


-------

1 , 2008/09 வாக்கில் தன் குடும்பத்தில் ஏற்பட்ட தகறாரு காரணமாக ஒரு பத்திரிக்கை அலுவலகம் தீ வைத்து கொளுத்தபட்டது அப்போது அங்கு பணியாற்றிய 3 அப்பாவி உயிர்கள் பலியானது அது சமுகத்துக்கு நன்மை பயக்கும் செயலா ??

2, 1990/1991 வருடம் வாக்கில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் கட்சியாக மாற்றம் செய்த நேரம் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பொது கூட்டம் நடந்த போது சில கலவரம் ஏற்பட்டது அது சமுகத்திற்கு நன்மை பயக்கும் செயலா ? ஏதோ அரசியல் கட்சிகளின் உதவியால் அந்த வழக்கில் இருந்து திருமாவளவன் விடுதலை செய்யப்பட்டார்,

3,மும்பை தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகளுக்கும் ,போலீசுக்கும் நடந்த சண்டையில் சில காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் அப்போது உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கில் போட்ட போது அவனுக்கு வக்காலத்து வாங்கி அவனை சித்தரித்தன இங்கு உள்ள சில இயக்கம் மற்றும் கட்சிகள் அது சமுகத்துக்கு நன்மை பயக்கும் செயலா ?? ( அது எந்த இயக்கம் , எந்த கட்சி என்று தங்களுக்கு தெரியாததா )

4,எதோ சில காரணங்களுக்காக ஒரு பேருந்தை சில கயவர்கள் கொளுத்தினர் அதில் 3 அப்பாவி உயிர்கள் பலியானது அவர்கள் தண்டிக்கபட்டார்களா ??

5, போன வருடம் பசும்பொன் சென்று திரும்பிய அப்பாவி மனிதர்கள் மீது சில சமுக விரோதிகள் தாக்கினர் அதில் எம் உறவுகள் பலர் உயிர் இழந்தனர், அதை செய்தவர்கள் யார் என்று தங்களுக்கு தெரியாததா ?? அவர்கள் சார்ந்த இயக்ககளும் , கட்சிகளும் ஏன் இன்னும் தடை செய்யபட வில்லை அது சமுகத்துக்கு நன்மை பயக்கும் செயலா ?? அதனால் சட்டம் ஒழுங்கு சீர் குலையவில்லையா ?

----------------


சில வருடங்களுக்கு முன்பு தற்போதய நன்நீலம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உணவு துறை அமைச்சருமாகிய காமராஜ் அவர்கள் சிதம்பரத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி பொது கூடத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை காங்கிரஸ் நாடாள மன்ற உறுப்பினரும் முன்னால் விளையாட்டு துறை அமைச்சருமாகிய மணி சங்கர் அய்யர் அவர்கள் அவதுறாக பேசியதாக கூறி காரில் விடு திரும்பிய மணி சங்கர் அய்யர் அவர்களை மயிலாடு துறை அருகில் வழி மறைத்து காமராஜ் தாக்கி வன்முறையில் ஈடு பட்டார் அவர்மீது கட்சியின் பொதுசெயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்????????? மாறாக அவருக்கு மந்திரி பதவி வழங்க பட்டு உள்ளது என்னடா உங்க நியாயம்.

இன்னும் சொல்லி கொண்டே போகலாம்,பதிவு பெரியதாக போகும் என்பதை கருத்தில் கொண்டு இதோடு முடித்து கொள்கிறேன்..

No comments:

Post a Comment