Monday, May 13, 2013

மருத்துவர் அய்யா தான் கொடுத்த வாக்குறுதியை தவறி விட்டார் .. வாரிசு அரசியல் செய்கிறார் என்று சொல்பவர்களுக்கு இதோ சவுக்கடி..சாட்டையடி..நெத்தியடி..

மருத்துவர் அய்யா தான் கொடுத்த வாக்குறுதியை தவறி விட்டார் .. வாரிசு அரசியல் செய்கிறார் என்று சொல்பவர்களுக்கு இதோ சவுக்கடி..சாட்டையடி..நெத்தியடி..





அக்கா கவிதா இராமதாசு:

அய்யா அவர்கள் சொன்ன வாக்குறுதியை எடுத்துக் கொள்வோம்.. "தனது பிள்ளைகள் அரசியலுக்கு வர மாட்டார்கள்" என்பது தான் அது..

எந்த பெற்றோரும் இதை தான் நீ படிக்கனும்..இப்படி தான் வாழனும் என யாரையும் கட்டுபடுத்த முடியாது..வழி காட்டலாம் வழி உருவாக்கலாம்...அவ்வளோதான்..அது கூட ஒரு குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டு தான்..அதையும் தாண்டி வருவது தனி மனித உரிமை மறுப்பாகும்..

அய்யா அவர் தன் வாக்குறுதியை கருதில் கொண்டு தான் அவர் மகனை ஒரு மருத்துவர் ஆக்கினார்.. அவர் தம் மகன் அரசியலுக்கு வருவார்..வரனும் என்று எதிர்பாத்திருந்தால் அவர் ஏன் அவரை மருத்துவராக்க வேண்டும்? பேசாமல் கட்சியின் தலைவராக எப்போதே ஆகி இருக்கலாமே?

இங்கு ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.. மற்ற கட்சிகளை போல் யாரோ தொடங்கி.. யாரோ கைபற்றியது போல் இங்கு  நடக்கவில்லை.. அய்யா தொடங்கிய கட்சி..

தன் சுய உழைப்பில் வளர்த்த இயக்கம் இது.. அப்போது கூட அவர் 'ம்ற்றவர்களை' மந்திரி ஆக்கி விட்டு தான் அழகு பார்த்தார்.. தன் மகன் அரசியலுக்கு வருவதை அவர் விரும்பவில்லை..ஆனால், பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு விட்டு பலர் துரோகம் செய்த காலகட்டம் அது... அப்போது தான் தகுதியும் தலைமை பண்பும் உள்ள அவரது மகனை தலைவர் உள்ளிட்ட கட்சியின் முன்ணனி பொறுப்பாளராக முன்னிறுத்தினார்கள்..

வாரிசு அரசியல் பற்றி பேசுபவர்களுக்கு ஒரு கேள்வி ...


ஆற்றலும், ஆளுமை திறனும் இருந்தும்., அவருடைய மகன் என்ற ஒரே காரணதால் அரசியலுக்கு வரக் கூடாது என்பது அவர் மகனின் தனி மனித உரிமை மீறல் ஆகாதா? நாம் ஒவ்வொருவரும் என்னவாக வேண்டும் ..எந்த பாதையில் செல்ல வேண்டும் என தீர்மானிப்பது அவரவர் கையில்..


அய்யா இந்த வாக்குறுதியை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆயினும் கொடுத்தார்.. மற்றவர்களில் இருந்து தான் மாறுபட்டவர் என்பதை உணர்த்ததான்.. அதை நடைமுறை படுதவும் செய்தார்.. அவரை விமர்சிப்பவர்கள் அவரின் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ள மறந்து.. வாரிசு அரசியல்..வாக்கு தவறி விட்டார் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை..

WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com

1 comment: