Friday, May 3, 2013

இது தான் நீதியா ? - தமிழக அரசு மற்றும் காவல் துறையின் சதி அம்பலம்: திருப்பரங்குன்றம், மதுரை, கூடங்குளம் என மேலும் வழக்குகள் தயார்


இது தான் நீதியா ? - காவல் துறையின் சதி அம்பலம்: 
விழுப்புரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து பாமக தலைவர் ராமதாஸுக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமதாஸ் மீது விழுப்புரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராமதாஸ் சார்பில்  ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், இந்த வழக்கின் விசாரணைக்கு காவல் துறை தரப்பில் விசாரணை அதிகாரி ராமநாதன் ஆஜராகவில்லை. அவர் முக்கிய வழக்குக்காக உயர் நீதிமன்றத்துக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் காவல் துறை சார்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் பதில்மனு தாக்கல் செய்ய அரை மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது.

ஆயினும் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கேட்டனர். ஆனால் நீதிபதி கால அவகாசம் தரவில்லை. 

இதனால் ராமதாஸ், ஜி.கேமணி, எம்.எல்.ஏ கணேஷ் குமார் உள்பட பாமகவினர் 463 பேருக்கு ஒரு நபர்  ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தர விட்டார்.

விழுப்புரத்தில் போடப்பட்ட வழக்கில் மட்டுமே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவரைக் கைது செய்ய உத்தரவு பெற்றிருப்பதால், தற்போதைக்கு ராமதாஸ் சிறையிலிருந்து வெளி வர இயலாது என்றே தெரிகிறது.

செய்தி: தினமணி

## இது தான் நீதியா ? இது தான் நீதியா ? இது தான் நீதியா ? 

இது தான் நீதியா ? - தமிழக அரசு மற்றும் காவல் துறையின் சதி அம்பலம்: திருப்பரங்குன்றம், மதுரை, கூடங்குளம் என மேலும் வழக்குகள் தயார்

விழுப்புரம் வழக்கில் மட்டுமே பிணை வழங்கப்பட்டுள்ளது. இனி திருக்கழுகுன்றம் வழக்கில் திருக்கழுகுன்றத்தில் மருத்துவர் அய்யா முன்நிறுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடக்கப்படுவார்.

அதே போன்று மதுரை, கூடங்குளம் ஆகிய இடங்களிலும் மருத்துவர் அய்யா அவர்கள் மீது வழக்குகள் தயாராகிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, திருப்பரங்குன்றம், மதுரை, கூடங்குளம் என தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் இழுத்தடிக்கப்பட்டு தொடர்ந்து சிறையிலேயே அவரை வைத்திருக்கும் திட்டம் உள்ளது.

2 comments:

  1. திருமாவளவனை கைது செய்வதை விட்டுவிட்டு மருத்துவர் அய்யாவை கைது கண்டிக்க தக்கது. தலித் மற்றும் வன்னியர் இல்லாத அதிகாரிகள் நடுநிலை விசாரணை நடத்தவேண்டும். தலித் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு பிற சமூகம் மீது பழி சுமத்தலாம் என காலம் மாறி கொண்டு வருகிறது. இப்படி செய்வதால் தலித் மக்கள் பிற இனத்தவரிடம் இருந்து அன்னியப்பட்டு கொண்டு வருகிறார்கள். தலித் என்பது குற்றம் செய்து தப்பிக்க கொடுத்த பட்டம் இல்லை. உண்மை ஒருநாள் வெளி வரும்.

    ReplyDelete