கைது எதிரொலி: வந்தவாசி அருகே பரபரப்பு அதிமுக உறுப்பினர் அட்டையை குப்பையில் போட்ட பெண்கள்
வந்தவாசி: வந்தவாசி அருகே அதிமுக பெண் உறுப்பினர்கள், தங்களது கட்சி உறுப்பினர் அட்டையை குப்பையில் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த செம்பூர் கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிமுக பெண் உறுப்பினர்கள், செல்வி என்பவர் தலைமையில் அங்குள்ள ரேஷன் கடை எதிரே நேற்று திரண்டனர். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவம், மரக்காணம் கலவரத்தில் அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியும், வந்தவாசி அருகே இளைஞர்கள் தாக்கப்பட்டதில் செம்பூர் கிராமத்தினர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்ததை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இதையடுத்து தங்களது அதிமுக உறுப்பினர் அட்டைகளை அங்குள்ள ரேஷன் கடை அருகில் கிடந்த குப்பையில் போட்டனர். அப்போது கைது செய்யப்பட்டுள்ள ஒரு பிரிவினரை உடனடியாக விடுதலை செய்ய கோரி, கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com
No comments:
Post a Comment