Sunday, May 5, 2013

பேரூந்துகள் மீது கல்வீச்சு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி விட்டு பா.ம.க. மீது பழி போட சதி அம்பலம்


Anti-Social VCK attacked public to put blame on PMK

பேரூந்துகள் மீது கல்வீச்சு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம்  ஏற்படுத்தி விட்டு பா.ம.க. மீது பழி போட சதி அம்பலம்

YouTube Video Link:
http://www.youtube.com/watch?v=Kc1xUmEwV7k





பா.ம.க. தலைமைநிலைய செய்தி

பேரூந்துகள் மீது கல்வீச்சு: பா.ம.க. மீது பழி போட சதி

 மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியதற்காக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாசு உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். இதையடுத்து பேரூந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் உடைக்கப் படுவதாகவும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு பா.ம.க.வினர் தான் காரணம் என்றும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அறவழியில் அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும் என்று  பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே  ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள், கறுப்புக்கொடி ஏற்றுதல் உள்ளிட்ட அறவழிப் போராட்டங்களில் பா.ம.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,  வன்முறைகளுக்கு பா.ம.க. மீது பழி போடப்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எவரும்  எங்கும் பேரூந்துகள் மீது கல்வீச்சு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் போன்ற செயல்களில் ஈடுபடவில்லை.
 ஆனால், பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி விட்டு பா.ம.க. மீது பழி போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே கடந்த 3&ஆம் தேதி காலை அரசுப்பேரூந்துகள் மீது 15 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. இதில்  2 பேரூந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதற்குக் காரணமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 15 பேரை அவ்வழியே சுற்றுக்காவல் சென்ற காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், இதையறிந்த வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஈஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களை உடனடியாக விடுதலை செய்துள்ளார்.அதேபோல், புதுவை & விழுப்புரம் இடையே இயங்கும் தனியார் பேரூந்தை விழுப்புரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகியான தேசிங்கு என்பவர் கல்வீசித் தாக்கியுள்ளார். அவரை அப்பகுதி மக்களே பிடித்துக் கொடுத்தும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பா.ம.க. வழக்கறிஞர்கள் பிரிவு ஆதாரங்களுடன் நிரூபித்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

  மரக்காணத்தை அடுத்த முருக்கேரி என்ற இடத்தில் லாரி மீது கல் வீசப்பட்டதில் அதன் ஓட்டுனர் காயமடைந்து உயிரிழந்தார். காவல்துறை நெருக்கடி காரணமாக அப்பகுதியில் வாழும் வன்னியர்கள் அனைவரும் வெளியேறிவிட்ட நிலையில், திருவாரி, கொட்டிவாக்கம் ஆகிய இரு காலணிகளைச் சேர்ந்தவர்கள் தான் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதுகுறித்தும் காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டிருக்கிறது. இதனிடையே, மாமல்லபுரம் நகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் நேற்றுக் கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அதிக எண்ணிக்கையில் பேரூந்துகளை உடைக்க சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

  இன்னொருபுறம் வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் அரங்கேற்றும் வன்முறைகளுக்கும் பா.ம.க. மீது பழி சுமத்தப்படுகிறது.திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் மதுக்கடையை பா.ம.க. எரித்ததாகக் கூறப்பட்ட நிலையில், பணத்தை மோசடி செய்வதற்காக மதுக்கடை ஊழியர்களே கடைக்கு தீ வைத்தது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.அரியலூர் மாவட்டம் வாரணாசியில் மதுக்கடை எரிந்ததற்கு பா.ம.க. காரணமாக இருக்க முடியாது; வேறு காரணங்களால் தீ ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நடந்த வன்முறைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் தான் காரணம்.தலித் குடியிருப்புகள் அதிகமுள்ளபகுதிகளில் தான் இத்தகைய வன்முறைகள் அதிகம் நடக்கின்றன என்பதிலிருந்தே அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இதற்கான பழியை  பா.ம.க. மீது போட்டு அவர்கள் தப்பித்து வருகின்றனர். பா.ம.க. ஒரு வன்முறை கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக காவல்துறையில் சிலரும் இதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது. இனியாவது காவல்துறையினர் நியாயமாக செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தமிழகத்தில் சிறு தவறு நடந்தாலும் அதற்கு நாம் தான் காரணம் என்று பழி போட ஆட்சியாளர்களும், நமது எதிரிகளும் திட்டமிட்டிருப்பதால்,  பொது மக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில், பா.ம.க.வினர் தொடர்ந்து அறவழியில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துமாறு பாட்டாளி மக்கள் கட்சித் தலைமை நிலையம் கேட்டுக்கொள்கிறது.


VCK, Viduthalai Chiruthaigal Katchi, VCK Bus Attack, VCK as PMK, Need Justice Marakkanam, Marakkanam TRUTH, Marakkanam What happened, No Justice, Media Corruption, Media Against PMK, Ramadoss Arrest, Ayya Arrest, Ramadoss Jail, Anbumani Arrest, Anbumani JAIL, Marakanam Incident, Vanniyars Attacked by Dalit, Vanniyar Men Killed, Ramadoss, Pattali Makkal Katchi, Anbumani Ramadoss, PMK, Vanniyar Sangam, Ayya Ramadoss, Vanniyar Kula Kshatriyar



WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com


No comments:

Post a Comment