தமிழகத்தில் வன்னிய மக்களை வஞ்சிப்பதாக தர்மபுரி அனைத்து கட்சி வன்னியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி
வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்!
தமிழகத்தில் வன்னிய மக்களை வஞ்சிப்பதாக தர்மபுரி அனைத்து கட்சி வன்னியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி நாயக்கன் கொட்டாய் வன்முறை சம்பவத்திற்கு முக்கிய காரணம் குழந்தை திருமணம் அந்த குழந்தை திருமணத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
நாகராஜன் தற்கொலை செய்து கொள்ள காரணமானவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன?
நாயக்கன் கொட்டாய் வன்முறை சம்பவத்தில் வன்னிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்காதது மற்றும் வழக்கு பதிவு செய்யாதது ஏன்?
காதல் நாடகத் திருமணங்கள் நடத்தப்படுவது உண்மையா? அல்லவா? பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தி மிரட்டலும், பணம் பறிப்பும் நடக்கிறதா? இல்லையா? அரசு விசாரனை செய்ய தயங்குவது ஏன்?
மரக்காணம் சம்பவத்தில் இரண்டு வன்னியர் முதலில் விபத்து என்றும் பிறகு பிரேத பரிசோதனையில் கொலை என்று வருகிறது. இந்த தகவல் மறைத்தது எதனால்.
தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஏன் எங்கள் கட்சிகள் கூட இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தியுள்ளது. ஆனல் பாமக வினர் மீது மட்டும் எதற்கு வழக்கு? ஏன் வன்னியர்கள் என்பதாலா?
என்று தமிழக அரசை பார்த்து பாமகவினர் அல்லாத மற்ற கட்சி நிர்வாகிகள் தர்மபுரியில் கேள்வி எழுப்பிள்ளனர், மேலும் அவர்கள் குறிப்பிடும்போது தமிழகத்தில் மற்ற கட்சி தலைவர்களும் வன்னியர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். எங்கள் கட்சியில் வன்னியர்களே வேண்டாம் வன்னியர்கள் ஓட்டு வேண்டாம் என்று அறிவிக்க துணிவு இருக்கா? இதற்கு எல்லாம் பதில் இல்லாவிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் இதற்கான பதில் கிடைக்கும் என்று குறிபிட்டனர்.
இந்த கூட்டத்தில் திமுக முரளி, தேமுதிக முருகன், திமுக நகரமன்ற உறுப்பினர் சுருளி, அதிமுக நகரமன்ற உறுப்பினர் பழனி, மதிமுக நிர்வாகி விரமணி உள்ள 50 மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நன்றி: நக்கீரன்
No comments:
Post a Comment