Friday, May 3, 2013

கடந்த 2012 ஓராண்டாக நிலுவையில் இருந்த வழக்கில் தற்போது 2013-ல் அன்புமணி கைது - அதிகாலை 6.30 மணிக்கு கைது.

கடந்த 2012 ஓராண்டாக நிலுவையில் இருந்த வழக்கில்  தற்போது 2013-ல் அன்புமணி கைது - அதிகாலை 6.30 மணிக்கு கைது.

பா.ம.க. நிர்வாகிகள் பெரும் பாலானவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்படாமல் இருந்தார். பா.ம.க. சார்பிலான தகவல்களை அவர் வெளியிட்டு வந்தார். 

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திடீரென டாக்டர் அன்பு மணி ராமதாசும் கைது செய்யப்பட்டார். 
டாக்டர் அன்புமணியின் வீடு சென்னை தியாகராய நகரில் திலக் தெருவில் உள்ளது. இன்று அதிகாலை 6.30 மணிக்கு அந்த தெருவில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சுமார் 1 1/2 மணி நேரத்துக்குப் பிறகு மதுராந்தகம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். திருக்கழுக்குன்றம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சிவா முன்பு காலை 9.30 மணிக்கு டாக்டர் அன்புமணி ராமதாசை ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சிவா உத்தரவிட்டார். இதையடுத்து டாக்டர் அன்புமணி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

கடந்த 2012-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிபந்தனையை மீறி மாநாட்டை கூடுதல் நேரம் நடத்தி பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். கடந்த ஓராண்டாக நிலுவையில் இருந்த அந்த வழக்கில்தான் தற்போது டாக்டர் அன்பு மணி கைது செய்யப்பட்டுள்ளார். டாக்டர் அன்புமணி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 143, 147, 188 மற்றும் சி.எல்.ஏ. சட்டப்பிரிவு 7 (1) (ஏ) ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டாக்டர் அன்புமணி மீது சட்ட விரோதமாக கூடுதல், சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக் கள் பதிவாகி உள்ளது. 


முன்னதாக கைது செய்யப்பட்டதும் டாக்டர் அன்புமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- இது எங்கள் மீதான பழி வாங்கும் நடவடிக்கை. பா.ம.க. தலைவர்கள் அனைவரும் கைதாகியுள்ளனர். எங்களை விடுவித்து மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மரக்காணம் கலவரம் தொடர்பாக எல்லா கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசி நாடகம் நடத்தி வருகிறார். அவரது இந்த நாடகத்துக்கு ஒரு போதும் வெற்றி கிடைக்கப் போவதில்லை. பஸ்கள் மீது கல்வீசி தாக்குல் நடத்தப்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுக்கும், பாம.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பா.ம.க. தொண்டர்கள் யாரும் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. பா.ம.க. தொண்டர்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி அறவழியில் போராடி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். அவர் கைது செய்யப்பட்டபோது வடசென்னை மாவட்ட பா.ம.க. தலைவர் சுரேஷ், முன்னாள் நகர மைப்புக் குழு தலைவர் பிரகாஷ் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment