Saturday, April 27, 2013

மரக்காணத்தில் நடந்த கலவரத்திற்கு முக்கிய காரணம் திருமாவளவன்: அன்புமணி ராமதாஸ்

மரக்காணத்தில் நடந்த கலவரத்திற்கு முக்கிய
காரணம் தொல். திருமாவளவன்:
அன்புமணி ராமதாஸ்


மரக்காணத்தில் நடந்த கலவரத்திற்கு தொல்.
திருமாவளவன் மற்றும்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான்
முக்கிய காரணம் என முன்னாள் மத்திய
அமைச்சர் அன்புமணி ராமதாஸ்
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில் நடந்த
சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர்
பெருவிழாவில்
கலந்து கொண்டுவிட்டு வேனில் ஊர்
திரும்பும் பொழுது ஏற்பட்ட விபத்தில்
உயிரிழந்த ஆம்பூர் அருகே தேவலாபுரம்
பகுதியை சேர்ந்த பாமக தொண்டர்
கிருஷ்ணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற
ஆம்பூருக்கு அன்புமணி ராமதாஸ்
வருகை தந்தார்.
ஆறுதல் கூறிய பிறகு அவர்
செய்தியாளர்களிடம் கூறியபோது, மரக்காணம்
கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு
நடத்தப்பட்டதாகும். அதற்கு முக்கிய காரணம்
தொல். திருமாவளவன் மற்றும்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான்.
கலவரத்தில் கொல்லப்பட்டது எங்கள்
கட்சியை சேர்ந்த 2 தொண்டர்கள் தான்.
படுகாயமடைந்ததும் எங்கள் கட்சியினர் தான்.
அதிக அளவு வாகனங்கள் சேதமடைந்ததும்
எங்கள் கட்சியினரின் வாகனங்கள் தான்.
எல்லா இழப்புகளும் எங்களுக்கு தான்.
தருமபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர­
்களுக்கு ரூ.8 கோடி அளவில் நிவாரனம்
வழங்கப்பட்டது. அது நமக்கும் கிடைக்குமென
மரக்காணத்தில் அவர்களாகவே தங்களுடைய
குடிசைகளுக்கு தீ வைத்துக் கொண்டனர். இந்த
கலவரம் தொடர்பாக சிபிஐ
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில்
விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது தகுந்த
நடவடிக்கை எடுக்க வேண்டுமென
அரசை கேட்டுக் கொள்கிறோம். தகுந்த
நடவடிக்கை எடுக்கவில்லையெனில்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கி சீர்கெடும்,
பதட்டமான சூழ்நிலை உருவாகுமென
அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இறந்த கிருஷ்ணனின் குடும்பத்திற்கு ரூ.50
ஆயிரம் நிதியுதவியும், விபத்தில்
காயமடைந்த 11 பேருக்கும்
நிதியுதவியை பாமக சார்பில்
அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர். வேலு,
என்.டி. சண்முகம்,
அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பி
மு. கலையரசு, முன்னாள்
சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.கே. ராஜா,
இளவழகன், நடராஜன் மற்றும்
பாமகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்
உடனிருந்தனர்.

No comments:

Post a Comment