மரக்காணம் கலவரம் திருமாவளவனால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது : ராமதாஸ் பேட்டி
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’மரக்காணத்தில் நடந்த கலவரம் திருமாவளவனால் ஒரு வாரத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டு அவர்கள் கட்சியினரால் அரங்கேற்றப்பட்டது தான். 24-ந்தேதி திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். 2002-ம் ஆண்டு மரக்காணம் காலனியில் நுழைந்து வன்னியர்கள் தாக்கினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
2002-ம் ஆண்டு உண்மையில் நடந்தது என்ன? என்பது எல்லோருக்கும் தெரியும். எங்கள் கட்சி வேட்பாளராக நின்று மாற்று கட்சிக்கு சென்ற ஒருவரது பெட்ரோல் பங்க் முன்பு 2 வன்னியர்களை எரித்து கொன்றார்கள். தலித்துகளுக்கு எதுவும் நடக்கவில்லை. இப்போதும் அதே பெட்ரோல் பங்கில் தான் சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.
மரக்காணத்தில் கலவரத்தை நடத்துவதற்காக சென்னை வேளச்சேரி, கே.கே.நகர் பகுதிகளில் இருந்து குண்டர்களை அழைத்து சென்றுள்ளனர். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருபவர்களுக்கு மரக்காணம் தலித் காலனி என்பது எப்படி தெரியும்? அவர்கள் அந்த காலனி பகுதியிலேயே தோப்புக்குள் அமர்ந்து சாப்பிட்டு இருக்கிறார்கள். திட்டமிட்டு கலவரத்தை அரங்கேற்றி 2 வன்னியர்களை வெட்டியும் அடித்தும் கொன்றுள்ளனர். அதையும் கூட விபத்தில் பலியானதாக பதிவு செய்ய போலீசார் முயற்சித்தனர்.
மரக்காணத்தில் மறியல் நடந்தபோது 70 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நின்று உள்ளன. அந்த வாகனங்களை திரும்பிச் செல்லும்படி போலீஸ் உயர் அதிகாரிகள் விரட்டியடித்துள்ளனர். 500-க்கும் மேற் பட்ட வாகனங்கள் நொறுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக 1000-க்கும் மேற்பட்ட வன்னியர்கள் மீது வழக்குப் போட்டு உள்ளனர். ஆனால் உண்மையில் கலவரத்தில் ஈடுபட்ட தலித்துகள் மீது ஒரு வழக்கும் இல்லை.
மரக்காணத்தில் சேதம் ஏற்பட்டதும் உயிர் இழப்புகளை சந்தித்ததும் வன்னியர்கள்தான். இந்த பிரச்சி னையில் விசாரணை நடத்தி உண்மை நிலையை அரசு வெளிக் கொண்டு வர வேண்டும். மரக்காணம் கலவரத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு நாளை மறுநாள் (1-ந்தேதி) எனது தலைமையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சி.பி.ஐ. விசாரணையாக இருந்தாலும் அதில் தலித் மற்றும் வன்னிய அதிகாரிகள் யாரும் இடம் பெறக் கூடாது. இந்த கலவரத்துக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தலில் நாங்கள் தனியாக நிற்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்து விட்டோம். துணிவு இருந்தால் எங்களை போல் மற்ற கட்சிகளும் தனித்து தேர்தலை சந்திக்கட்டும். இந்த சாதி கலவரத்துக்கு காரணம் தலித் போர்வையில் ஒரு சிலர் கலவரத்தில் ஈடுபடுவதுதான்.
கள்ளக்குறிச்சியில் காதல் நாடகம் நடத்தி ரூ.3 கோடி பேரம் பேசப்பட்டது. நாமக்கல்லில் அதேபோல் காதல் நாடகம் பேரம் ரூ.10 கோடி பேசப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாங்கள் எதிரி அல்ல. தீண்டாமையை நாங்கள் ஆதரிக்கவில்லை. நாங்கள் எதிர்ப்பது விடுதலை சிறுத்தைகளைத்தான். விடுதலை சிறுத்தைகள் மட்டும் தலித்துகளின் அமைப்பு அல்ல. இதுபோன்று தமிழ்நாட்டில் 32 அமைப்புகள் செயல்படுகின்றன’’என்று கூறினார்.
----
Visit: www.facebook.com/Need.Justice.In.Marakkanam
நீதிகிடைக்கும் வரை ஓயாது இந்த வன்னிய பேரினம்!!
இந்த திட்ட மிட்டு நடத்தப்பட்ட வன்முறையால் பலியான சிறுவன். விவேக்-கிற்க்கு நீதிவேண்டும்?!
பாலகன் விவேக்கின் கொலைக்கு நீதிவேண்டும்!. கொலைகார பாவிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அவன் செய்த குற்றம் என்ன? வன்னியனாய் பிறந்ததுதான் அவன் குற்றமா?! தமிழனாய் பிறந்ததுதான் அவன் செய்த குற்றமா?
மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பில்லையா தமிழ்நாட்டில்?
ஓயமாட்டோம்!! ஓயமாட்டோம்!! சிறுவன் விவேக்கின் படுகொலைக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்வரை ஓயமாட்டோம்!!
No comments:
Post a Comment