மரக்காணம் கலவரம்: மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட், விஜயகாந்த் கட்சிகள் நிலவரம்
மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட்
-------------------------------------
நேற்று திடீரென கட்சியின் செயற்குழுவை கூட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தது.
வன்னியர்கள் 1500 பேருக்கும் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இரண்டு வன்னியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர், ஆனால் ஒரு வழக்கு கூட இல்லை. கொலைகாரர்களை விடுத்து எழவு விழுந்த வீட்டில் கைதை கேட்கிறது மார்க்சிஸ்ட் கட்சி
விஜயகாந்த் கட்சி
---------------------------
விஜயகாந்தின் அறிக்கை, இரண்டு வெவ்வேறு ஜாதிகளை சார்ந்தவர்கள் அடித்துக் கொள்கிறார்கள். அதன் மூலம் கொலைச் சம்பவங்களும், கொள்ளை அடிக்கும் சம்பவங்களும், வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதும், பொது சொத்துகளை நாசம் செய்வதும் போன்ற சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த இரண்டு ஜாதியில் ஒரு ஜாதியின் தலைவரை தான் இன்று சந்தித்து பல் இளித்துக்கொண்டார், அப்படியென்றால் விஜயகாந்த் குறிப்பிடும் அந்த கொள்ளை அடிக்கும் சம்பவம் குறிப்பிடுவது யாரை?
அடுத்து அ.மார்க்ஸ் இன் உண்மை அறியும் குழு கிளம்பி போகும், போய்விட்டு வந்து வன்னியர்கள் தங்களை தாங்களே வெட்டிக்கொண்டு செத்து போனார்கள் என்று சொல்லும்
திமுகவின் உண்மை அறியும் குழு போகும், போய்விட்டு வந்து குடிசைகளின் உள்ளே இருந்த கோஹினூர் வைரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டார்கள் என்று அறிக்கை கொடுக்கும்
எதற்கும் வாயைத்திறக்கவே திறக்காத அதிமுக இதற்கும் வாயை திறக்காது,
No comments:
Post a Comment