Saturday, June 8, 2013

உலகில் எங்குமே இல்லாத மனித உரிமை மீறல்: அரசியல் பழிவாங்கும் அடக்குமுறையின் உச்சகட்டம் - 122 பேர் மீது இதுவரை தடுப்புக்காவல் - அமைதி வழியில் நீதிக்காக குரல் கொடுப்போம் வாருங்கள்

அவசரம் - முக்கிய அறிவிப்பு:

உலகில் எங்குமே இல்லாத மனித உரிமை மீறல்: அரசியல் பழிவாங்கும் அடக்குமுறையின் உச்சகட்டம் - 122 பேர் மீது இதுவரை தடுப்புக்காவல் - அமைதி வழியில் நீதிக்காக குரல் கொடுப்போம் வாருங்கள்..










மருத்துவர் அய்யா அவர்களின் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், மரக்காணம் வன்னியர்கள் படுகொலைக்கு நீதிகேட்டும் அறவழியில் போராட்டம் செய்தவர்கள் தொடங்கி, அதன்பிறகு வீட்டிலிருந்தவர்களையும் சேர்த்து சுமார் நூறுக்கு மேற்பட்ட அப்பாவி வன்னிய சமுதாயத்தினரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், குண்டர் சட்டத்தின் கீழும் தடுப்புக்காவலில் அடைத்துள்ளது ஜெ. அரசாங்கம்.

அரியலூர் மாவட்டத்தில் - வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் ஜெ. குரு அவர்கள் + மற்றும் ஒருவர்
வேலூர் மாவட்டத்தில் 13 பேர்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பேர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் 3 பேர்,
கடலூர் மாவட்டத்தில் 6 பேர்,
விழுப்புரம் மாவட்டத்தில் 7 பேர்,
ஈரோடு மாவட்டத்தில் 4 பேர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 பேர்,
சேலம் மாவட்டத்தில் 11 பேர்,

நாகை மாவட்டத்தில் 9 பேர்,
தர்மபுரி மாவட்டத்தில் 10 பேர்,
தஞ்சை மாவட்டத்தில் 6 பேர்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 பேர்,

நாமக்கல் மாவட்டத்தில் 3 பேர்,
கரூர் மாவட்டத்தில் ஒருவர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவர்,
திருவாரூர் மாவட்டத்தில் 5 பேர்

(23.06.2013 வரை மொத்தம் 122 பேர்)

இவர்கள் அனைவரும் கொடுஞ்சிறையில், எந்தக் குற்றமும் செய்யாமல் ஒரு வருட சிறைத் தண்டைனையை எதிர்கொண்டுள்ளனர். இந்திய வரலாற்றில், ஒரே ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 122 பேர், அதுவும் ஒரே நேரத்தில் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவது இதுதான் முதல் முறை.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜெ அரசின் அரசியல் பழிவாங்கும் அடக்குமுறைகளால் தேசிய பாதுகாப்பு மற்றும் குண்டர் சட்டத்தின் மூலம் சிறையில் அடைக்கபட்டுள்ளனர். மேலும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஜாமீன் கிடைக்கப்பெற்றும் நாள்தோறும் காவல்நிலையம் சென்று சென்று ஒரு நாளில் இருமுறை கையெழுதிட வேண்டியுள்ளது. அவர்கள் தங்களது அன்றாட அலுவல்களை கூட செய்ய முடியாமல் நாள்தோறும் காவல்நிலையத்திற்கும் வீட்டிற்கும் அலைய வேண்டியுள்ளது. அவர்கள் குடும்பங்களின் நிலையோ சொல்ல முடியாத மீளமுடியாத பொருளாதார சூழலில் சிக்கியுள்ளனர்.

இந்த இக்கட்டான சூழலில் இளைஞர்களாகிய நம் சிறு பங்கு நமது பழிவாங்கப்பட்ட, உரிமைகள் இழந்து துன்புரும் சமுதாயத்திற்கு மிகவும் அவசியமாக உள்ளது. அன்பும், கருணையுள்ளமும், சமுதாய அக்கறையும்  கொண்ட ஒவ்வொருவரும் நம் தமிழ் சமுதாயத்தில் நமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எடுத்து கூற தங்களின் செயல்பாடுகள் இக்கணம் தேவைபடுகிறது. வஞ்சிக்கப்பட்ட வன்னிய மக்களுக்கு உதவி செய்ய முன்வருபவர்கள்  முதற்கட்ட  சமுதாய பணியாக  கீழ்கண்டவற்றை  செய்ய வேண்டுகின்றோம்.

 1. முதலில், தாங்கள் ஒவ்வொருவரும் தங்களை தொடர்புகொள்ள  கீழ்காணும் மின்-படிவத்தை (Online-Form) பூர்த்தி செய்யவும்.

https://docs.google.com/forms/d/1a-wu6Pz3e-L0s-RsaCPCdIS6exXMXZoAWdQtsFgwhmA/viewform

2. அடுத்து,  தாங்கள் அனுப்பும் மின்னஞ்சல் முகவரிக்கு  பிரச்சாரத்திற்கான ஒரு கையேடு, துண்டுப்பிரசுரம் மற்றும் விண்ணப்ப படிவம் அனுப்பப்படும்.

3.அனுப்பப்படும் ஆவணத்தை தங்களின் குடும்பத்தார், நட்புவட்டம் மற்றும் எல்லோரிடமும் அதனை விளக்கி, அதனுடன் இணைக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்திசெய்து, மின்னஞ்சல் மூலமாகவோ, தபால் மூலமாகவோ எங்களுக்கு அனுப்பிவைக்கவும்.

4. இவ்வாறு சேகரிக்கப்பட்ட படிவங்களை  ஐ.நா பன்னாட்டு மனித உரிமை கழகத்திற்கு அனுப்பி முறையிடுவோம். மேலும், உலகளாவிய  சட்டம் மற்றும் நீதித்துறை கண்காணிப்பு ஆணையங்களின் கவனித்திற்கு கொண்டு சென்று நீதி கேட்போம்.

5. மேலும், மாவட்டவாரியாக சிறையில் உள்ளவர்களின் முகவரி மற்றும் குடும்ப விபரங்கள் அனுப்பி வைக்கப்படும். உங்களால் முடிந்தால், குண்டர் மற்றும் தேசிய பாதுக்காப்பு சட்டத்தால் பாதிக்கபட்டோரின் குடும்பங்கள் தங்கள் ஊரில் இருந்தால், அவர்களை நேரில் சந்தித்து  அவர்கள் அடையும் இன்னல்களையும், துன்பத்தையும் ஒரு பேட்டியாக எடுத்து அனுப்பவும்.

மேலும், இது சம்பந்தமாக மாவட்டந்தோறும் சிறு குழுக்கள் அமைத்து ஆலோசிக்க விரைவில் உங்களை தொடர்பு கொள்வோம்.

வன்னிய சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை அமைதியான அறவழியில் போராட இந்த கையேழுத்து பிரச்சாரம் மூலம் ஒரு மிகப்பெரும் புரட்சியை எல்லோரும் இணைந்து ஏற்படுத்துவோம்.

ஒருங்கிணைப்பாளர்கள்:

பிரேம் குமார்
வீரா
Dr.சக்திவேல்
Dr.ராஜராஜன்
Dr.மணிக்கண்ணன்
கார்த்திகேயன்

LINK - Online Form:
https://docs.google.com/forms/d/1a-wu6Pz3e-L0s-RsaCPCdIS6exXMXZoAWdQtsFgwhmA/viewform

2 comments:

  1. குற்றம் செய்யாத வன்னிய மக்களை ஆதாரம் அல்லாமல் வன்னிய இனத்தில் பிறந்ததற்காக கைது படலம் தொடர்ந்தது தமிழக அரசு வன்னிய மக்கள் மீது கொண்டுள்ள வன்மத்தை வெளிப்படையாக கொண்டுள்ளது தெரிகிறது..

    ReplyDelete
  2. வன்னியர்களை மட்டும் பழிவாங்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது

    ReplyDelete