Saturday, May 18, 2013

ஒரு சட்டமன்ற உருப்பினருக்கு சாப்பிடக் கூட அனுமதி மறுத்து காவல்துறை அராஜகம் - நீதிபதி கடும் கண்டனம்

ஒரு சட்டமன்ற உருப்பினருக்கு சாப்பிடக் கூட அனுமதி மறுத்து காவல்துறை அராஜகம் - நீதிபதி கடும் கண்டனம்




நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட காடுவெட்டி குருவுக்கு காவல்துறையினர் சாப்பிட அனுமதி கொடுக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த வருடம் சித்திரை பெருவிழாவில் பொதுமக்களின் அமைதியை குலைக்கும் வகையில் பேசியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச்செயலாளர் கிட்டு தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காடுவெட்டி குரு இன்று திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். கத்திரி வெயிலில் அனல் தகிக்க மதியம் 2 மணிக்கு கொண்டு வரப்பட்டவர், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள்அறையில் உட்கார வைக்கப்பட்டார்.

இதையடுத்து நீதிபதியிடம் சாப்பிட உத்திரவு வாங்கிக் கொண்டு சாப்பிட அமர்ந்தவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 'வெளியில் இருந்து கொண்டு வந்த உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது' என காவல்துறையினர் கறார் காட்டியதால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு நீதிபதியின் அனுமதியோடு காவல்துறையினர் சாப்பிட அனுமதித்தனர்.

ஆனால், 'இப்படிப்பட்ட சாப்பாட்டை நான் சாப்பிட வேண்டுமா?' என காடுவெட்டி குரு கோபமாக சொல்லிவிட்டு சாப்பிட மறுத்துவிட்டார். பின்பு நீதிபதி சிவா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார் காடுவெட்டி குரு. 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி. வேனில் ஏறிய பின்பு பேட்டி கொடுக்க முயன்றார் காடுவெட்டி குரு. ஆனால் வேனை நிறுத்தாமல் காவல்துறையினர் உடனடியாக எடுத்துச் சென்றுவிட்டனர்.

காடுவெட்டி குரு மீது போடப்பட்டுள்ள நான்கு வழக்குகளும் வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment